டுமீல் தேசியம் சில குறிப்புகள்
2009 ஈழப் போருக்குப் பிறகு உருவாகி வந்த கருத்தியல் தான் ஆசீவக தமிழ் தேசியம். அது என்ன ஆ.த.தே? யூ ட்யூப் தவிர எங்கும் காணப்படாத இதன் விழியங்களுக்கு நான் பரம ரசிகன்...தமிழர்களுக்கு எதிராக எல்லோரும் சதி செய்கிறார்கள் கிட்டத்தட்ட ஒட்டு மொத்த உலகமுமே தமிழனுக்கு எதிரிகள் தான்.. உலகின் ஆதிப் பழங்கால தொல் இனம் தமிழினம் தான்... ஆதிப் பழங்கால தொல் குரங்கு பேசியது தமிழ் மொழி தான்... உலக மொழிகளுக்கு எல்லாம் ஆயா- ஸாரி தாய். திராவிட இயக்கம் பெரும் மக்கள் இயக்கமாக மாற முடிந்ததற்கு காரணம் அதற்கென்று ஒரு சிந்தனை அடித்தளத்தை அதன் முன்னோடிகள் அமைத்துத் தந்ததுதான்... பிறகு தொடர்ச்சியாக பல சமரசங்களினூடாக பயணித்து பேரியக்கமாகி இன்று அதன் அந்திம காலத்தில் நிற்கிறது... இந்துத்துவ கருத்தியலை பொறுத்தவரையும் பெரும்பாலும் இதுவே உண்மை.... ஆனால் தமிழ் தேசியம் திராவிடத்தைக் காட்டிலும் பழமையானது தான் இருந்தாலும் கூட ஏன் அதனால் மிகப் பெரிய மக்கள் இயக்கமாக உருவாக முடியவில்லை? காரணங்கள் பல... அவற்றில் ஒன்று ஒரு குறிப்பிட்ட நிலையில் தமிழ் தேசியம் கேலிக் கூத்தாக மாறிவிடுவது தான்...அனைத்தையும் எங்கும் இல்லாத இலுமினாட...