டுமீல் தேசியம் சில குறிப்புகள்

2009 ஈழப் போருக்குப் பிறகு உருவாகி வந்த கருத்தியல் தான் ஆசீவக தமிழ் தேசியம். அது என்ன ஆ.த.தே? யூ ட்யூப் தவிர எங்கும் காணப்படாத இதன் விழியங்களுக்கு நான் பரம ரசிகன்...தமிழர்களுக்கு எதிராக எல்லோரும் சதி செய்கிறார்கள் கிட்டத்தட்ட ஒட்டு மொத்த உலகமுமே தமிழனுக்கு எதிரிகள் தான்.. உலகின் ஆதிப் பழங்கால தொல் இனம் தமிழினம் தான்... ஆதிப் பழங்கால தொல் குரங்கு பேசியது தமிழ் மொழி தான்... உலக மொழிகளுக்கு எல்லாம் ஆயா- ஸாரி தாய். திராவிட இயக்கம் பெரும் மக்கள் இயக்கமாக மாற முடிந்ததற்கு காரணம் அதற்கென்று ஒரு சிந்தனை அடித்தளத்தை அதன் முன்னோடிகள் அமைத்துத்  தந்ததுதான்... பிறகு தொடர்ச்சியாக பல சமரசங்களினூடாக பயணித்து பேரியக்கமாகி இன்று அதன் அந்திம காலத்தில் நிற்கிறது... இந்துத்துவ கருத்தியலை பொறுத்தவரையும் பெரும்பாலும் இதுவே உண்மை.... ஆனால் தமிழ் தேசியம் திராவிடத்தைக் காட்டிலும் பழமையானது தான் இருந்தாலும் கூட ஏன் அதனால் மிகப் பெரிய மக்கள் இயக்கமாக உருவாக முடியவில்லை? காரணங்கள் பல... அவற்றில் ஒன்று ஒரு குறிப்பிட்ட நிலையில் தமிழ் தேசியம் கேலிக் கூத்தாக மாறிவிடுவது தான்...அனைத்தையும் எங்கும் இல்லாத இலுமினாட்டி சதி என்பதும் அதன் குறியீடுகளின் அடிப்படையில் மூடத்தனமான விளக்கங்களை கொடுப்பதும் கொஞ்சம் சிந்திக்கும் திறன் உடையவர்களை ஒரு புன்முறுவலுடன் கடந்துப் போகச் செய்கிறது. பாரிசாலன் வகையறாக்கள் கணிசமானோர்க்கு அவ்வகையில் நல்ல பொழுதுபோக்கு அது வரை நல்லது... ஆனால் நீங்கள் நகைச்சுவை உணர்வற்றவராக இருந்தால் கொஞ்சம் கஷ்டம் தான்... இதனை பார்க்கும் பெரும்பாலான விடலைகள் அவ்வகையைச் சேர்ந்தவர்களே... மாற்றுத் தரப்பை சிந்திப்பது கூட அல்ல செவி கொடுப்பதற்கு கூட தயாரில்லாத தரப்பு... பல வாட்சப் ஃபேஸ்புக் பொய்களை அடித்து விடப்படுபவைகளை உண்மை என நம்பும் ஒரு பெரும் கும்பல் இங்கு உள்ளது.... இதுவே நடப்பது அனைத்தும் தமிழனுக்கு திட்டவட்டமாக எதிரானது என கதறும் கும்பல்... துரதிர்ஷ்டவசமாக இவர்களே பெரும்பான்மை எண்ணிக்கையில் உள்ளவர்கள்.

Comments

Popular posts from this blog

நான் அறிந்த காந்தியர்கள்

My trip to himalayas